இந்து குழும'த்திலிருந்து வெளியாகும் 'வெற்றிக்கொடி' நாளிதழால் மாணவர்கள் திறன் மெருகேறும்: முதல் பிரதியை வெளியிட்டு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து
இந்து குழும'த்திலிருந்து பள்ளி மாணவர்களுக்காக புதி தாக தொடங்கப்பட்டுள்ள 'வெற்றிக் கொடி' நாளிதழை விழுப்புரத்தில் நேற்று வெளியிட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், இந்த நாளிதழால் மாணவர்களின் திறன் மேலும் மெருகேறும் என்று தெரிவித்தார்.
'இந்து குழும'த்தின் ஒரு அங்க மாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் காலத்தின் மாற்றங்களுக் கும், புதிய சவால்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
அதன் அடுத்த கட்ட நகர்வாக, மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாண வர்களுக்காக நேற்று முதல் வெளிவரத் தொடங்கியிருக்கிறது 'வெற்றிக்கொடி' நாளிதழ்.
வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகும் மாண வர்களுக்கான இந்த நாளிதழ், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இடையிலான அறிவுப் பூர்வ இணைப்பாக பல்வேறு கல்விசார் அம்சங்களைத் தாங்கி வெளிவருகிறது.
கல்வி கற்பித்தலில் புரிதலுடன் கூடிய அறிவுரைகள், பாடங்கள் பயில்வதில் கூடுதல் வழிகாட்டுதல் கள், தேர்வுகள் பற்றிய எளிய விளக்கங்கள் மற்றும் மாணவர் களுக்கான ஆக்கப்பூர்வமான நடப் புச் செய்திகளோடு வெளிவரும் இந்த 'வெற்றிக்கொடி' புதிய நாளேட்டின் முதல் பிரதியை விழுப் புரத்தில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளி யிட்டார்.
தொடர்ந்து. 'வெற்றிக் கொடி'யை முழுமையாக வாசித்த அமைச்சர், 'மாணவர்களுக்கு பய னுள்ள செய்தித்தாள் இது. தமிழக மாணவ, மாணவிகள் மிகத் திறமை யானவர்கள். அவர்களின் திறன் இச் செய்தித்தாளால் இன்னும் மேம் படும், மெருகேறும். கல்வி சார்ந்த நன்னெறிகளைத் தரும் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டார்.
அமைச்சருடன் எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென் னரசு ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் ஆர்வத்தோடு 'வெற்றிக்கொடி' நாளிதழை வாசித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...