அரசுப் பள்ளி மாணவர்களை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்ட மாக 4,560 பேர் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக படிப்பில் சிறந்து விளங்கும் 4,560 மாணவர்கள் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மத்திய அரசின் ‘ராஷ்டிர அவிஷ்கார் அபியான்’ திட் டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாண வர்கள் அண்டை மாநிலங் களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள் ளனர்.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பில் சிறந்த 960 பேர், 9-ம் வகுப்பில் சிறந்த 3,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 4 மண்டலங்க ளாக பிரிக்கப்பட்டு திருவனந்த புரம், மைசூர், திருப்பதி, ஹைதராபாத் ஆகிய இடங் களுக்கு 3 நாள் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப் படுவார்கள். இதற்கு ரூ.72 லட்சம் நிதி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆர்சிடிசி) இணைந்து ரயில், பேருந்து மூலம் ஆசிரியர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், சுற் றுலா செல்லும் மாணவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெற்றோரின் உரிய அனுமதி பெற்ற பின்பே மாணவர்களை சுற்றுலா வுக்கு அழைத்துச் செல்லவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது ’’என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...