Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.10.19

திருக்குறள்


அதிகாரம்:வெகுளாமை

திருக்குறள்:301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

விளக்கம்:

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

பழமொழி

He who sows thorns will never reap grapes.

 விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி

இந்த உலகம் பொருட்களாலும் நபர்களாலும் நிறைந்துள்ளது...
மனமாற்றம் இவைகளை மையப்படுத்தியே நிகழ்கிறது..

---அம்ருதானந்தமயி

பொது அறிவு

1. ஆண் கங்காருவின் பெயர் என்ன?

 பூமர்

 2.எந்த பாலூட்டி இனம் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யும் ?

 சுண்டெலி

English words & meanings

Mettalurgy - study about metals
உலோகவியல்
உலோகங்களின் பண்புகள், அவைகளை பிரித்தெடுத்தல் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.

Metal - a solid shiny material
உலோகம்.

ஆரோக்ய வாழ்வு

வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் அது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

Some important  abbreviations for students

dist. - district.   

div. - division

நீதிக்கதை

ஜெகனின் புதுசட்டை

பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான்.

ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான்.

பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான்.

ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.

ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது.

ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு.

என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா..... ? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன்.

ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு.

அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான்.

உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன்.

கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான்.

எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு.

நீதி :
முட்டாள்தனமான கோபம் ஆபத்தானது.

செவ்வாய்
ஆங்கிலம்

The 5 Short Vowel Sounds

The five short vowel sounds in English are a, e, i, o, and u.

short a: and, as, and after

short e: pen, hen, and lend

short i: it and in

short o: top and hop

short u: under and cup

இன்றைய செய்திகள்

22.10.19

*தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்..ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு!

*2 மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

*தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் !

*நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இதுவரை 62% வாக்குகள் பதிவாகி உள்ளது.

*தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காத்திருக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் ஃபாலோ ஆன்

Today's Headlines

🌸Red Alert to Tamil Nadu . expecting 22 cm rain in one day!

 🌸 2 State Assembly Elections ended smoothly today.

 🌸India condemns Pakistan for suspending Postal service .

🌸 By-election of Nanguneri constituency ended today.  62% of the votes cast so far in this election.

 🌸 Ranchi: The Indian team is looking forward to win the match by  innings in the Ranji Test against South Africa. Follow on again for South Africa.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive