திருக்குறள்
அதிகாரம்:வாய்மை
திருக்குறள்:298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
பழமொழி
A little knowledge is a dangerous thing.
அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
நம் மனம் பழக்க வழக்கங்களின் படியே செல்கிறது..
பேராசையும் இழிசெயலும் இதனால் தான் ஏற்படுகிறது.
---Dr.இராதாகிருஷ்ணன்
பொது அறிவு
1. வைரஸை எதன் மூலம் காண முடியும்?
ஒளி நுண்ணோக்கி
2.'உடலின் அச்சு' என்று அழைக்கப்படும் எலும்பு எது ?
முதுகு எலும்பு (முள்ளந்தண்டு வடம்)
English words & meanings
* Joule - the SI unit of work or energy.
ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகு ஆகும். வெப்பம், மின்சாரம் அளக்க இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
* Journey - an act of travelling from one place to another. பிரயாணம்.
ஆரோக்ய வாழ்வு
பப்பாளி இலைச்சாறு நம் உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்துப் போராடி மலேரியா, டெங்கு காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ரத்த செல்களை அதிகரிக்கிறது.
Some important abbreviations for students
tbsp - Table Spoon
tsp - teaspoon
நீதிக்கதை
முட்டாள் தவளையும், புத்திசாலி தவளையும்
ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரியின் நீர் குளிர்ச்சியை தாங்க முடியாத ஒரு தவளை, மழை நின்றதும் கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை கண்டு மகிழ்ந்து வரவேற்றது. பின் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. புதிய தவளையை துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது.
நான் ஏரியில் தங்கி இருந்தேன் அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது, ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நீ பொய்யன் என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கினாள் அதனுள் ஏரித் தவளை, தாவிக்குதித்து தோண்டித் தண்ணீர்ருடன் மேலே சென்று ஏரியை நோக்கிச் சென்றது.
நீதி :
முட்டாள்களிடம் இருப்பதை விட தனியே செல்வதே சிறந்தது.
வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு
சமூகவியல்
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம்
திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது.
பாரம்பரிய விளையாட்டு - 6
பூப்பறிக்க வருகிறோம் ;
3 முதல் 10 எண்ணிக்கை வரையுள்ள குழந்தைகள் இரண்டு அணிகளாக பிரிந்து தெரு அல்லது திறந்த வெளி பகுதிகளில் விளையாடும் விளையாட்டு பூப்பறிக்க வருகிறோம்.
இரு அணிகளுக்கு இடையே தரையில் ஒரு கோடு வரைந்து பின் ஆட்டம் தொடங்கும்.
'பூப்பறிக்க வருகிறோம்' என துவங்கும் சிறப்பு பாடலை பாடி முடித்த பின் , ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒரு நபர் கோட்டின் இருபுறமும் நின்று ஒருவரை ஒருவர் தன் அணியின் பக்கம் இழுக்க வேண்டும் யார் கோட்டை தாண்டுகிறாரோ அவர் அவுட். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் விளையாட்டு இது.
இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகளின் பதில் சொல்லும் திறன், பாடும் திறன், தாக்குப்பிடிக்கும் திறன், உடல் வலிமை, குழு உணர்வு ஆகிய திறன்கள் மேம்படுகின்றன.
இன்றைய செய்திகள்
18.10.19
*யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை முதல் அதிகாரப்பூர்வமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சோதனை ஓட்டமாக இந்தியாவின் அல்லையன்ஸ் ஏர் விமானம் அங்கு நேற்று தரை இறங்கியது.
* நீலகிரியில் கனமழை காரணமாக 3 நாட்கள் ரெயில் ரத்து
*தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
*சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ. பி. சாஹி நியமனம்
*தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Today's Headlines
🌸From Yazhppaanam International Airport the first flight service started after 36 years. India's Alliance Air plane landed earlier as test run.
🌸Trains in Nilgris are cancelled due to heavy rains.
🌸Chennai Meteorological Department Director Dr. Puviarasan says that there will be widespread moderate rainfall in all districts of Tamil Nadu.
🌸A.B Sahi is appointed as the chief Justice of the Madras High Court .
🌸 Under the supervision of Rahul Dravid, who is the President of the National Cricket Academy, cricket training is being offered to youths from 16 countries.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...