பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டினால் 5% வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே பெரும்பாலான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி உள்ள நிலையில், வருமான வரி செலுத்த வேண்டி இருப்பதால் வர்த்தகத்தில் பணப்புழக்கம் குறைந்து வருவது பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட், மோட்டார் வாகன உற்பத்தி என அனைத்திலும் விற்பனை குறைந்து தேக்கம் காணப்படுகிறது.
இது குறித்து தீவிரமாக யோசித்து வரும் மத்திய நிதியமைச்சகம், வருமான வரி உச்சவரம்பை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை உள்ள தனி நபருக்கு அடுத்த நிதியாண்டு முதல் வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதே போன்று ஆண்டு வருமானம் 5 கோடியே தாண்டினால் 42.74%வரி விதிக்கப்படுகிறது. இந்த அளவுகோல் ஆசிய நாடுகளில் 29.99% ஆக உள்ளது. இதே பிரச்சனைகளால் அண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...