Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.19

அக்டோபர் 5



சர்வதேச ஆசிரியர் தினம்.

திருக்குறள்

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:289

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

பழமொழி

A king kills on the day of the offence, God stands (delays) and kills ...

அரசன் அன்று கொல்வான்..., தெய்வம் நின்று கொல்லும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.

2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.

பொன்மொழி

சிக்கலான பாதைகளையும்  தனக்கானதாக மாற்றிக் கொள்பவர் வெற்றிபெறுகிறார்...எந்தப் பாதையாக இருந்தாலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பவர் துவண்டுப்போகிறார்...

-----ஓசோ

பொது அறிவு

1. நீல புரட்சி என்றால் என்ன?

மீன் வளம் பெருக்குவது

2. தங்க புரட்சி என்றால் என்ன?

தேன், பழங்கள் உற்பத்தி பெருக்குவது

English words & meanings

 Angel - a messenger of God.
தேவ தூதர்

Anteater - an animal which eats ants.
எறும்பை உண்ணும் ஒரு விலங்கு

ஆரோக்ய வாழ்வு

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாக பயன்படுகின்றன.

Some important  abbreviations for students

C/o - care of. 

dept. - department

நீதிக்கதை

சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்

அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.

குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.

மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.

நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

05.10.2019

* அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

* பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக மும்பை ரயில் நிலையத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளாலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

* விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்க அணி  ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

* 200 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை டினா ஆஷர் தங்கம் வென்றார்.

Today's Headlines

* Crackers which make much noise are banned warns  Pollution Control Officer.

* In order to prohibit plastic action is taken to make seats made of recycled plastic in Mumbai Railway Station.

* In the third day  test match which is being played at the Visakapattinam the South African Team took 385 runs for 8 wickets.

* In 200 metre running race England Player Tina Asher won the gold

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive