Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கடிதம் எழுதினால் பரிசு வெல்லலாம் Writing a letter can win the prize




கடிதம் எழுதும் போட்டியை ஊக்கப்படுத்த தபால்துறை கடிதம் எழுதும் போட்டியை நடத்துகிறது. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று பரிசு பெறலாம்.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தபால்துறை கடித போட்டியை நடத்துகிறது. அவ்வகையில் நடப்பாண்டு 'அன்புள்ள பாபு, நீங்கள் அழியாதவர்' எனும் தலைப்பில் கடித போட்டி நடக்கவுள்ளது.
கடிதம் 'ஏ 4' தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இன்லாண்டு லெட்டர் பிரிவில் எழுதுவோர், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். Writing a letter can win the prize 
தபால் அலுவலகங்களில் வாங்கப்படும் 'லெட்டர்', ஸ்டாம்ப், கவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.பதினெட்டு வயது வரை, பதினெட்டு வயதை கடந்தவர் என இரு பிரிவாக பிரித்து போட்டி நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். பொதுமக்கள் தங்கள் கடிதங்களை,
'முதன்மை தபால் அதிகாரி,
தமிழ்நாடு வட்டம்,
சென்னை 600 002,' 
என்ற முகவரிக்கு நவ., 30க்குள் அனுப்ப வேண்டும்.கடித கவரின் முன்பகுதியில் தபால்துறை கடித போட்டி என எழுத வேண்டும். முதல் பரிசு பெறுவோருக்கு, 50 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாவது பரிசு, 25 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் விபரங்களை அறியலாம்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive