'செல்வ மகள் சேமிப்பு
திட்டத்தில், வயது சான்றுக்கு, ஆதார், பான் கார்டு பயன்படுத்தலாம்' என, தபால் துறை அறிவித்து உள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, தபால் துறை, 'சுகன்யா சம்ரிதி' எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அவர்களது பெற்றோரோ, பாதுகாவலரோ, 250 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம்.இதில், செலுத்தும் தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி, 21 வயதில் கணக்கை முடிக்கும் போது, மூன்று மடங்கு தொகை கிடைப்பதால், பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தில், பெண் குழந்தைகளை சேர்க்க, வயது சான்றுக்கு, பிறப்பு சான்றிதழ் தவிர மற்ற ஆவணங்களை, தபால் நிலைய அதிகாரிகள் ஏற்பதில்லை என, புகார் எழுந்தது.இதையடுத்து, 'செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர, பிறப்பு சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட்டை, வயது சான்று ஆவணமாக பயன்படுத்தலாம்' என, தபால் துறை தெரிவித்து உள்ளது.Public Exam 2025
Latest Updates
Home »
» 'செல்வ மகள்' திட்டம்; வயது சான்றுக்கு ஆதார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...