தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தின்படியே அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் எழுதிக் கொள்ளலாம்.
இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 3- ஆங்கிலம், ஏப்ரல் 7-கணிதம், ஏப்ரல் 8-அறிவியல், ஏப்ரல் 9- சமூக அறிவியல் ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10 நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...