சென்னை: 'கருவூல துறையில் பணியாற்றுவோரும், அவர்களின் குடும்பத்தினரும், இருசக்கர வாகனங்களில், 'ஹெல்மெட்' அணிந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்' என, அத்துறையின் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாகி உள்ளது.விளக்கம் உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என, உயர் நீதிமன்றமும் கண்காணித்து, அரசிடம் விளக்கம் கேட்டு வருகிறது. இதனால், ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த, போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், 'கருவூல துறையில் பணியாற்றுவோர், ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், சு.ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் பிறப்பித்துள்ள உத்தரவு: துறையில் பணியாற்றுவோர், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; குடும்ப உறுப்பினர்களையும், ஹெல்மெட் அணிந்து செல்லும்படி அறிவுறுத்த வேண்டும். கார்களில் செல்லும் அதிகாரிகள் கண்டிப்பாக, 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். காரில் பயணிக்கும் மற்ற அதிகாரிகளும், சீட் பெல்ட் பயன்படுத்த வேண்டும்.நம் துறை அலுவலர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உத்தரவு:
ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய அறிவுறுத்துவது, போக்குவரத்து காவல் துறையின் பணி மட்டுமல்ல; இதில், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உண்டு என்ற வகையில், கருவூல கணக்கு துறை ஆணையரின் உத்தரவு அமைந்துஉள்ளது. இதை, மற்ற துறை தலைமை அதிகாரிகளும் பின்பற்றினால், மக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...