திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பிற ஒன்றியங்களுக்கு உபரி பணியிட மாறுதல் 30. 8.2019 அன்று கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
இந்த உபரி பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் உபரி பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் உபரி பணியிட மாறுதல் ஆணை செயல்படுத்தப்படவில்லை.
அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று கூறியதன் அடிப்படையில் இவ்வழக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...