ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்விஸ் தேர்வுக்கான பயிற்சிகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நிலையத்தில் தரப்படும் பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களும் பார்த்து பயன்பெறும் வகையில், வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்ப ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேருவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி வருகிறது.
இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகள் உள்ளன. 2020-21ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு 2020ம் ஆண்டு மே 31ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிப்பதோடு, தங்குமிடம், உணவு, நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்வாகி முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சியோடு மாதம் ரூ.3,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு 13.10.2019 அன்று தமிழகத்தில் 20 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சியை இணையதளத்தில் ஒளிபரப்ப தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி நிலையத்தில் தரப்படும் பயிற்சிகளை கிராமப்புற மாணவர்களும் பார்த்து பயன்பெறும் வகையில், வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்ப ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் எனவும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...