ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே கல்குண்டு வலசே சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் என்பவரின் 13 வயது மகன் கார்த்தீஸ்வரன். இவர் அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
வகுப்பில் ஆசிரியை அபிலாஷா பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது ஆசிரியர் தமிழரசு அறிவுறுத்தல் படி பள்ளியின் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போடா கார்த்தீஸ்வரனை அபிலாஷா அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போடா முயன்ற போது கார்த்தீஸ்வரன் உடலில் மின்சாரம் பலமாக பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ஆசிரியர்களின் அலட்சிய போக்கின் காரணமாகவே கார்த்தீஸ்வரன் உயிரிழந்ததாக கூறி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து ராமேஷ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்தர் ஆகியோர் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் ஆசிரியர் தமிழரசு மற்றும் ஆசிரிழை அபிலாஷா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...