. அதில், ஒரு தும்பியின் வாலில் பெரிய பாறாங்கல்லை கட்டி வைப்பது எவ்வளவு
பெரிய சுமையோ, அதைவிட பன்மடங்கு அதிகமானது ஒரு 10 பத்து வயது மாணவனின்
தலையில் பொதுத் தேர்வு எனும் பாரத்தை தூக்கி வைப்பது என தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி திட்டம் மேலும் " இந்த கல்வி திட்டம் நம் குழந்தைகளுக்கு எதை
சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தை நிச்சயம் சொல்லிக்கொடுக்கும்.
இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. குழந்தைகளுக்கும்,
பெற்றோருக்கும் தேர்வு பயம் தான் அதிகமாகும். அதிக பாதிப்பு சாதிகளாலும்,
மதத்தினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படப் போகும்
ஏற்றத் தாழ்வுகளால் தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது.
இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது, ஒரு குழந்தை இந்த சமூகத்தில்
வாழ நமக்கு தகுதியே இல்லையோ என கூனிக்குறுகிப் போகும். வன்மையாக
கண்டிக்கிறேன்
நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி
எந்த குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தி
இருக்கும் பொதுத் தேர்வு திட்டம் தான் முக்கிய காரணமாக இருக்கும்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன்தாராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிப்பதுடன்,
இந்த திட்டத்தை உடனடியாக திரும்பிப்பெற வலியுறுத்துகிறது. மாற்றம் எளிதாகும்
இந்த புதிய திட்டத்திற்கு பதிலாக பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவதிலும்,
ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...