'மருத்துவ படிப்பை போல,
இன்ஜினியரிங் படிப்பிற்கும், தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. 'நீட்' தேர்வில், ஒவ்வொரு பிரிவினருக்கும் 'கட் - ஆப்' தகுதி மதிப்பெண்ணை, தேசிய தேர்வு முகமை நிர்ணயித்துள்ளது.இதன்படி, தரவரிசை பட்டியல் நிர்ணயிக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., சேர்க்கை நடந்தது.
அதேநேரத்தில், தேசிய தேர்வு முகமை நிர்ணயித்த தகுதி மதிப்பெண்ணை பலர் பெறாததால், பி.டி.எஸ்., படிப்பில் நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்பும் வகையில், இந்திய பல் மருத்துவ கவுன்சில், புதிய முடிவு எடுத்து, நீட் தேர்ச்சி மதிப்பெண்ணை, 10 சதவீதம் குறைத்துள்ளது.
பொது பிரிவுக்கு, 40; பொது பிரிவு மாற்று திறனாளிகளுக்கு, 35; இதர பிரிவினருக்கு, 30 சதவீதமாக, தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதிய தகுதி மதிப்பெண்ணை, தேசிய தேர்வு முகமை அறிவிக்க உள்ளது.
இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்புக்கும், இதேபோன்று தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.அதாவது, பி.இ., மற்றும், பி.டெக்., படிக்க, பிளஸ் 2வில், பொது பிரிவினர் குறைந்த பட்சம், 50 சதவீதம்; பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், 45; இதர பிரிவினர், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதனால், குறைந்த பட்சமாக, 35 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன.எனவே, அவற்றை நிரப்பும் வகையில், மருத்துவ படிப்பு போல், இன்ஜினியரிங்குக்கான தகுதி மதிப்பெண் அளவையும் குறைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...