தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி
உதவித்தொகை பெற்றுக்கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டாத நிலை
உள்ளது.மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன்
தேர்வு திட்டத்தில் கடந்த 2019-20ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை
பெறுவதற்கு தகுதி பெற்ற மாணவ மாணவியரிடம் விண்ணப்பங்கள் இணையதளத்தில்
பதிவேற்றுதல் தொடர்பான ஆய்வு கூட்டம், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில்
நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தி–்ல 2019-20ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு
பயிலும் மாணவர்களுக்கு புதியதாக விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டும். இந்த
கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில்
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களையும் இணையதளம் வாயிலாக
புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் ஆகியுள்ள
நிலையில் 2019-20ம் கல்வியாண்டில் தகுதி பெற்ற 6695 மாணவர்களில் 5.9.2019
நாள் நிலவரப்படி 18 மாவட்டங்களில் இருந்து 357 விண்ணப்பங்கள் மட்டுமே
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதர மாவட்டங்கள் பணியை இதுவரை தொடங்கவில்லை.
மேலும் புதுப்பித்தல் பணிகளும் குறைந்த அளவில் நடந்துள்ளது
தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பணியாளர்களை முறையாக அமர்த்தி பணிகள் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் நிறைவு செய்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பெற்று வழங்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது மாணவர்களின் பெயர், பிறந்தநாள் மற்றும் தந்தை பெயர் என்எம்எம்எஸ்எஸ் தேர்ச்சி அறிக்கையில் உள்ளவாறு பயன்படுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி தவிர மீதமுள்ள அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் பொது என பயன்படுத்த வேண்டும். வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு குறைவாக பதிவிட வேண்டும். 8 இலக்கத்தில் என்எம்எம்எஸ்எஸ் தேர்வு எண்ணை பயன்படுத்த வேண்டும். 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதியதாக விண்ணப்பிக்கும்போது பிரீ மெட்ரிக் என்றும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதியதாக விண்ணப்பிக்கும்போது போஸ்ட் மெட்ரிக் என்று பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...