வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும், 26, 27ம் தேதிகளில்,
வங்கி அதிகாரிகள், நாடு முழுவதும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், 10 பொது துறை வங்கிகள்
இணைக்கப்படும் என, ஆக., 31ல் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, செப்., 1ல், வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது,
வங்கி அதிகாரிகள் மட்டும், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.
'நோட்டீஸ்':
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகள் இணைப் புக்கு
எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில
இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட, நான்கு வங்கி அதிகாரிகள்
சங்கத்தினர், வரும், 26, 27ம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். நாடு
முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமான, வங்கி அதிகாரிகள்
பணிபுரிகின்றனர். இவர்கள் வேலை நிறுத்தத்தால், வங்கியின் செயல்பாடுகள்
முழுவதும் முடங்கும். மேலும், ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை உடனடியாக
நிரப்புதல் உட்பட, பல்வேறு கோரிக்கைகளும், இதில் முன்வைக்கப்பட உள்ளன.
வேலை நிறுத்தம் தொடர்பாக, நேற்று, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில், தனியார் வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதனால், 20
ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான, பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்படும்.
இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.
பாதிப்பு ஏற்படும்:
வங்கி அதிகாரிகள், 26, 27ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வரும், 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை என்பதால், அனைத்து வங்கிகளுக்கும்
விடுமுறை. 29ம் தேதி ஞாயிறு என்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள், வங்கி
சேவைகளில் பாதிப்பு ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...