Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்வதில் மிகுந்த விருப்பமுடையவர், அளவறிந்து வாழும் நெறியில் நின்று வாழமாட்டார்.

பழமொழி

Justice delayed is justice denied

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

ஒரு கருத்தை ஒற்றைக் கண்ணோட்டத்தில் அல்லது ஒரே கோணத்தில் பார்ப்பவர்கள் ,அதில் உள்ள உண்மைகளை ஆராய்வதில்லை. எனவே உங்கள் கருத்து பன்முகம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் ..

இறையன்பு அவர்கள்

பொது அறிவு

1. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

செப்டம்பர் 27.

2. 'தென்னாட்டு ஸ்பா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம் எது?

குற்றாலம் (தமிழ்நாடு)

3. சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம் எது?

ஏற்காடு

English words & meanings

Vacuole - closed sac present in the cytoplasm of the cell for storage purposes

நுண் குமிழ்கள் - செல்களில் காணப்படும் மூடப்பட்ட பை போன்ற அமைப்பு.
உணவு சேமிக்க உதவும். சில நேரங்களில் கழிவு சேமித்து செல்களைப் பாதுகாக்கும்.

Virtual - not physically existing  but made by software to appear real
மெய் நிகர்

ஆரோக்ய வாழ்வு

நொச்சி இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. கொசு விரட்டுவதில் முக்கியப் பங்கு இந்த நோய்க்கு உண்டு .

Some important  abbreviations for students

* BR. -  Bihar

* CH.   -   Chandigarh

நீதிக்கதை

பாசமுள்ள சிறுவன்

மாட்டுகாரன் ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை.

அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை

அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர்.

மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.

அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.

நீதி :
அன்பால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

23.09.2019

* கீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

* சீனா ஓபன் பேட்மிண்டனில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சீன-தைபே வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 61 கிலோ பிரிவில் இந்தியாவின் ராகுல் அவேர் அமெரிக்காவின் டைலர் கிராஃபை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

Today's Headlines

🌸 Minister Mafa Pandiyarajan announced that  the first three excavations in kizhadi  will be published soon

 🌸 Meteorological Department announces heavy rainfall in Tamil Nadu on 25th and 26th due to atmospheric overlay cycle

 🌸The Election Commission has appealed to political parties not to use plastic and polythene materials.

 🌸Spainish shuttler Carolina Marin defeated  Taiwan's Tai Tzu Ying  in the China Open Badminton Championships and won the championship title.

 🌸 India's Rahul Aware won the bronze by beating America's Tyler Graff in the men's 61kg category at the World Wrestling Championships.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive