M S University November 2019 Examinations - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நவம்பர் 2019 பருவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று 16.09.2019 முதல் 30.09.2019 வரை அபராதம் இல்லாமல் தேர்வு கட்டணத்தை online ல் செலுத்தலாம். 03.10.2019 முதல் 10.10.2019 வரை தேர்வு கட்டணத்தோடு அபராதம் ரூபாய் 1000 சேர்த்து செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கல்லூரிகளில் தற்பொழுது படித்து கொண்டிருக்கும் மற்றும் படித்து முடித்த அனைத்து UG, PG, M.Phil. மாணவர்களும் https://www.online.msupayment.in/currentstudent/index.php - என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Practical தேர்வுகள் 17.10.2019 முதல் தொடங்கும் என்றும் 04.11.2019 முதல் Theory தேர்வுகள் தொடங்கி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது Subject Name | Subject Code போன்றவை சரியாக உள்ளதா என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் உடனே தங்கள் கல்லூரி அலுவலகத்திற்கு சென்று சரி செய்து கொள்ள வேண்டும். Arrear பாடங்களில் தற்பொழுது எழுத விருப்பம் இல்லாத பாடங்களை நீக்கிவிட்டு தேர்வு கட்டணம் செலுத்தலாம். எழுத வேண்டிய பாடம் தோன்றவில்லை என்றால் Subject Name Subject Code போன்றவற்றை மாணவர்களே add செய்து விட்டு தேர்வு கட்டணம் செலுத்தலாம். தேர்வு கட்டணம் செலுத்திய பின்னர் Payment Successful என்று வந்த பிறகும் Make Payment என்று வந்தால் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. 48 மணி நேரத்திற்குள் அது சரியாகிவிடும் என்றும் Payment Failure என்று வந்தால் மட்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளில் விண்ணப்பித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாணவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுங்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...