11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6
பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள்; கணிதம்,
இயற்பியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட 4 பாடங்கள் இருக்கும். அதற்கு
பதிலாக 3 பாடங்கள் கொண்ட ஒரு தொகுப்பை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்
செய்துள்ளது. இந்த புதிய முறையின் படி மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க
விரும்பும் மாணவர்கள் அவர்களுக்கான தனித்தனி பாட பிரிவுகளை தேர்வு செய்து
கொள்ளலாம்.
தற்போது உள்ள நடைமுறையின் படி 11-ம் வகுப்பில் இரு மாணவன் சேர்ந்தால், அந்த மாணவர் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற இரண்டு படிப்புகளுக்கும் சேர்ந்து ஒரு பிரிவை தேர்வு செய்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
இந்த முறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 11-ம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ளபடி அடுத்து வரக்கூடிய கல்வி ஆண்டுகளில் 600 மதிப்பெண்ணுக்கு எப்பொழுதும் போலவே தேர்வு நடைபெறும். புதிதாக 500 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுவதாவது; 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும்.
அதாவது 11மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு இனி வரும் காலங்களில் 500 மார்க்குகள் மட்டுமே தேர்வு நடத்தப்படும். இந்த நடைமுறை 2020-2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். தற்போது உள்ள 600 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும். 500 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும். இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...