கணித தேர்வு கணிதம், பல மாணவர்களுக்கு, கடினமானதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொது தேர்வில், கணித தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அடிப்படை மற்றும் ஸ்டாண்டர்டு என்று இரு லெவல்களில், தேர்வு நடத்தப்படுகிறது. ஏதாவது ஒரு லெவலை, மாணவர்கள் எழுதினால் போதும்.உயர் கல்வியில், கணிதத்தைப் பாடமாக எடுக்காத மாணவ, மாணவியர், அடிப்படை கணிதத்தை எழுதலாம். இது எளிதாக இருக்கும்.
ஸ்டாண்டர்டு கணிதம், நடைமுறையில் இருந்து வந்த கணிதத்தேர்வு போன்று இருக்கும்.அதேசமயம், 'கணிதம் இரு தேர்வுகளாக நடத்தப்படவில்லை; இரு லெவல்களில் நடத்தப் படுகிறது' என்பதை, சி.பி.எஸ்.இ., தெளிவுபடுத்தியுள்ளது. பாடத்திட்டம், உள் மதிப்பீட்டு முறை ஒரே மாதிரிதான் இருக்கும். ஸ்டாண்டர்டு லெவலில் தோல்வியடையும் மாணவர்கள், அடிப்படை லெவலை எழுத அனுமதிக்கப்படுவர். அடிப்படை லெவலில் தோல்வியடைந்தால், அவர்கள் அதே தேர்வைத்தான் எழுத முடியும். அடிப்படை லெவலை தேர்ந்தெடுக்கும் மாணவர், விரும்பினால், ஸ்டாண்டர்டு லெவலுக்கு மாறிக்கொள்ளவும் முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...