திருக்குறள்
அதிகாரம்:கூடாவொழுக்கம்
திருக்குறள்:273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
விளக்கம்:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
பழமொழி
A good when lost it valued most
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
பொன்மொழி
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி
கொள்ளவில்லையோ,அவனால்
நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ்
ஆலன்.
பொது அறிவு
* 1TMC என்பதில் TMC என்பதன் விரிவாக்கம் என்ன?
Thousand Million Cubic feet
* GSI என்பதன் விரிவாக்கம் என்ன?
Geological Survey of India
English words & meanings
* Illuminate - light up, cast light upon
ஒளி ஊட்டுதல்
* Imagine - form a mental concept, not in real world. கற்பனை
ஆரோக்ய வாழ்வு
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சித் தன்மை உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.
Some important abbreviations for students
LOM - Lead Office Manager
FA - Focus Area
நீதிக்கதை
பஞ்சவர்ண கிளி
நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.
அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன.
ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது.
அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான்.
நீதி :
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.
வியாழன்
அறிவியல்&கணினி
அறிவோம் அறிவியல்
Rubber Egg
மந்திரத்தில் மாங்காய் போல நாம் உண்ணும் முட்டையை ரப்பர் பந்து போல மாற்றலாம்
தேவையான பொருட்கள்
கண்ணாடி டம்ளர், முட்டை, வினிகர்
செயல்பாடு
முட்டையை கண்ணாடி டம்ளரில் இட்டு அதில் வினிகரை ஊற்றவும். இரண்டு நாட்கள் அதை அப்படியே விடவும்.
காண்பது என்ன?
இரப்பர் முட்டை
*காரணம்*
வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. முட்டையின் ஓடு கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. அமிலம் கார்பனேட்டுடன் இணைந்து கார்பன் டை ஆக்சைடு அல்லது கரியமில வாயுவை வெளியிடும். ஒரு நிலையில் கால்சியம் கார்பனேட் முழுவதும் கரைந்து முட்டை இரப்பர் முட்டையாகி விடும்.
இந்த வினிகர் தான் கடையில் வாங்கும் ஊறுகாய் போன்ற உணவு பொருட்கள் உள்ளது. சற்று சிந்தித்து பாருங்கள்.
கணினி சூழ் உலகு
8-ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள இணைய செயல்பாடுகள் பற்றிய காணொலி
காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய செய்திகள்
05.09.2019
☘ நிலவுக்கு மிக அருகில் நெருங்கியது சந்திரயான்- 2.
☘ சென்னை மற்றும் ரஷ்யா இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
☘தமிழகத்தில் மழை தொடரும். 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
☘சுடுமண்,பாசிகள்,நீர் வழிப்பாதைகள், இன்னும் பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முடிவுக்கு வருகிறது கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப்பணி.
☘டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார்.
☘அமெரிக்க ஓபன் டென்னிஸ்- காலிறுதியில் ரோஜர் பெடரர் தோல்வி.
Today's Headlines
🌸 Chandrayaan-2. Moves closer to moon
🌸 Agreement for freight shipping between Chennai and Russia was signed today.
🌸keezhadi Phase 5 is underway, with evidence of fire, algae, waterways, and more.
🌸Heavy Rain will continue in 3 districts in Tamilnadu.
🌸In New Delhi, Union Petroleum Minister Dharmendra Prasad met the Chief Minister and greeted the badminton heroine P V Sindhu.
🌸American Open Tennis - Roger Federer lost in quarter-finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...