சீர்மிகு சட்ட கல்லுாரியில், எல்.எல்.பி., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின், நேரடி கட்டுப்பாட்டில் உள்ள,
சீர்மிகு சட்ட கல்லுாரியில், எல்.எல்.பி., படிப்பு, மூன்றாண்டு மற்றும்
ஐந்தாண்டு என,நடத்தப்படுகிறது. இதில், ஐந்தாண்டு பட்டப் படிப்பிற்கான
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஏற்கனவே முடிந்து விட்டது. இதையடுத்து,
மூன்றாண்டுக்கான, எல்.எல்.பி., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்'
பதிவுகள், இரண்டு வாரங்களுக்கு முன்முடிந்தன. 'கட் ஆப்' மதிப்பெண்
பட்டியலை, அம்பேத்கர் சட்ட பல்கலை, நேற்று வெளியிட்டது. 'கட் ஆப்'
மதிப்பெண்படி, வரும், 20ம் தேதி, கவுன்சிலிங் நடத்தப்படும்
என,அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...