Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநரையை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் அழகு குறிப்புகள்!!




இளநரை முடி உதிர்வதை தடுக்க கரிசலாங்கண்ணி எண்ணெய் முடி உதிர்தல், இள நரை, சொட்டை, முடி உதிர்தல் என பலவகையான கூந்தல் பிரச்சனைகளை அடியோடு ஒழிக்க இந்த இயற்கை வைத்திய குறிப்புகளை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் பெறலாம்.
* முடி வளர, முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். சொட்டைத் தலையில் முடி வளர, பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
* வழுக்கைத் தலையில் முடி வளர, கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.
முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம். முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க, பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
* கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்க: இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
செய்முறை: இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் பட்டைபொடி, 5 ஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும்.
* இளநரை மறைய: மருதாணி இலை 1 கப், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் - 5, முழு சீயக்காய் - 4, சுத்தம் செய்த புங்கங்கொட்டை - 1, கரிசலாங்கண்ணி - 4 ஸ்பூன். செய்முறை: மேலே சொன்னவற்றை முந்தைய நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் இவற்றை அரைத்து விழுதாக்குங்கள். இதைத் தலைக்கு 'பேக்' ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த குளியல் போட்டால் நரை முடி அத்தனையும் கருப்பாகிவிடும். அடுத்த இளநரையும் வராது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive