சென்னை:'விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது' என, அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி துறையின், வேலை
நாள் காலண்டர் அடிப்படையில் தான் இயங்க வேண்டும். பள்ளி கல்வி துறையின்
விதிமுறைகளை பின்பற்றி, பள்ளிகள் நடத்தப்படும் என, உறுதிமொழி கடிதம் அளித்த
பிறகே, அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
ஆனால், பல பள்ளிகள், இந்த உறுதிமொழியை சரியாக பின்பற்றுவதில்லை. தங்கள்
விருப்பத்துக்கு ஏற்ப, வேலை நாட்களையும், தேர்வு நாட்களையும் நிர்ணயம்
செய்கின்றன.மேலும், பள்ளி கல்வி துறை விடுமுறை அறிவிக்கும் நாட்களில், சில
பள்ளிகள், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை வர வைக்கின்றன.இது
குறித்து, பெற்றோர் தரப்பில், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என,
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, பள்ளி கல்வி துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது
.இதன் அடிப்படையில், பள்ளிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரி, மகேஸ்வரி, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசால் அறிவிக்கப்படும் பொது
விடுமுறை நாட்களில், அனைத்து வகை பள்ளிகளிலும், எவ்வித சிறப்பு
வகுப்புகளும் நடத்தக்கூடாது. இதை, அனைத்து வகை, அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட, அனைத்து வகை பள்ளிகளும், தவறாமல்
பின்பற்ற வேண்டும்.பொது விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்தும்
பள்ளிகளின் மீது, அரசு விதிகளின்படி, கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...