தொடக்க, நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களை பணிநிரவல் கவுன்சிலிங்கிற்கு அழைத்து கட்டாய இடமாறுதல் செய்வதாக, ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2018 ஆக.,1 ல் 10 மாணவருக்கும் குறைவான பள்ளிகளில் இருக்கும் இரு ஆசிரியரில் ஒருவரை மட்டுமே பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று அந்தந்த மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கவுன்சிலிங் நடந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உட்பட தென் மாவட்டங்களில் அரசு உத்தரவை மீறி 2019 ஆக.,1 நிலவரப்படி 10 மாணவருக்கும் குறைவாக உள்ள பள்ளி ஆசிரியரையும் கவுன்சிலிங்கிற்கு அழைத்துள்ளனர். பணிநிரவல் வழங்காமல் விதியை மீறி கட்டாய இடமாறுதல் வழங்கியதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜோசப்சேவியர் கூறியதாவது: பணிநிரவல் என்றால் 10 மாணவருக்கும் குறைவாக உள்ள பள்ளியில் உள்ள இரு ஆசிரியரில் ஒருவரின் பணியிடத்தை காலி செய்து விட்டு, அவரை மாற்று பள்ளிக்கு பணிநிரவல் செய்யலாம். ஆனால் தென் மாவட்டங்களில் மட்டும் ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், இரு ஆசிரியரில் ஒருவரை கட்டாய இடமாற்றம் செய்துள்ளனர். அதிலும் அரசு உத்தரவை மீறி 2019 ஆக.,1 நிலவரப்படி ஆசிரியர்களை கணக்கெடுத்தது தான் கண்டனத்திற்குரியது. இடமாறுதல் கவுன்சிலிங்கில் விதியை அரசு பின்பற்றுவதில்லை என நீதிமன்றம் கண்டித்து வரும் நிலையில், மறைமுகமாக பணிநிரவல் என அழைத்து கட்டாய இடமாறுதல் செய்வதை கண்டிக்கிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னர், 6 மாணவருக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை எடுத்துள்ளனர், என்றார்.2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» அழைத்ததோ பணிநிரவல் கவுன்சிலிங்: கிடைத்ததோ கட்டாய இடமாற்றம் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...