பிஇ மாணவர்களும் கணிதத்தில்
தடுமாறுகின்றனர் என்பது ெதரியவந்துள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் பேசினார்.பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த 100 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் மேலாண்மை நிர்வாக மேம்பாடு பயிற்சி நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கியது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்றனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் வரவேற்றார். அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் இறையன்பு, பள்ளிக்கல்வி மாநில திட்ட கூடுதல் இயக்குனர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளி மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றின் அடிப்படையில் அவர்களுக்கு கணிதத்தை கற்பதிலும், அதை வெளிக்கொண்டு வருவதிலும் திறமை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட கணிதத்தில் தடுமாறுகின்றனர். இதற்காக பள்ளி அளவிலேயே மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக அதன் ஒரு கட்டமாக ஆஸ்திரேலியாவில் சிறப்பான எளிய கணிதம் போதிக்கும் முறை கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் போடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த கல்வி முறையில் கணிதப்பாடம் சொல்லித் தரப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...