உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது.
மேலும் இந்தப் புகையின் மூலம் அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு
வெளிப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் புகையினால் கார்பன்
மோனோ ஆக்சைடு வெளியாகி வருவதும் தெரியவந்துள்ளது. அதாவது தெற்கு
அமெரிக்காவின் கடற்பகுதியில் அதிகளவில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு பரவி
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் அமேசான் காடுகள் பூமியின் ஆக்ஸிஜன் வாயு அளவில் 20 சதவிகிதத்தை
வெளிப்படுத்துகின்றன. எனவே இது பூமியின் நுரையீரலாக செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் அங்கு இருந்து வரும்
ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறையும் அபாயம் ஏற்படும். இந்த அமேசான் காட்டை
அழிப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்று
ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...