அரசு உதவி கல்லூரிகளில் காலி யாக உள்ள 220 பிஎட் இடங் களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை (ஆக.26) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் 2 ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு 2,040 இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை இந்த ஆண்டு சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 3,800 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் 1,820 இடங்கள் மட்டுமே நிரம்பின.
அரசு உதவி கல்லூரிகளில் 220 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற் கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை (ஆக. 26) நடைபெற உள்ளது. இதையடுத்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக் காத மாணவர்களுக்கு குறுஞ் செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சேர்க்கை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...