Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.08.19

திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

விளக்கம்:

ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.

பழமொழி

A good when lost it valued most

 நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற இரண்டு வார்த்தைகளும் என் உள்ளத்தின் நிலையை காண்பிக்கும் மற்றும் என் பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2. எனவே அவற்றை நான் எப்பொழுதும் பயன்படுத்த முயல்வேன்.

பொன்மொழி

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு

1. உலகிலேயே மிகச் சிறிய முட்டை இடும் பறவையின் பெயர் என்ன?   
      
 ரீங்கார பறவை
             
2. தையல் இயந்திரம் கண்டு பிடித்தவர் யார்?

ஐசக் சிங்கார்


English words & meanings

Fahrenheit - a scale of temperature
வெப்பத்தை அளக்கும் கருவி, வெப்பமானி
டேனியல் காபிரியல் ஃபாரன்ஹீட் எனும் டச்சு நாட்டின் விஞ்ஞானி பெயரால் அழைக்கப் படுகிறது.
Fake - false one. பொய்யான

ஆரோக்ய வாழ்வு

பசியே ஏற்படுவதில்லை சாப்பிடப் பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும் .ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும் .

Some important  abbreviations for students
LRR - Legal Reserve Requirement
 CRR   - Cash Reserve Ratio


நீதிக்கதை

தூண்டில் மாட்டிய மீனும், தவளையும்

ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி, தண்ணீருக்குள் விட்டிருக்கிறான் என்றது. அட முட்டாளே! அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை.

நன்றி கெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்று சொல்லிக்கொண்டு, அந்த மீன் துடித்துக்கொண்டிருந்த புழுவை விழுங்கியது. பின் மீனும் துடித்துக்கொண்டே பரிதாபமாக ஏமாந்தேனே! என்றது.

நன்றி கெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்று மீன் சொல்லியதையே சொல்லிக்காட்டியது தவளை.

வெள்ளி

சமூகவியல் & விளையாட்டு

சுதந்திர தேவி சிலை என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில்,
நட்பின் அடையாளமாக பிரெஞ்சு நாடு அமெரிக்காவுக்கு இச்சிலையைஅளித்தது.
இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி ஆவார்.  1924 முதல்  அமெரிக்காவின் தேசிய சின்னம் ஆனது.

பாரம்பரிய விளையாட்டு

தாயம்

இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயம் மற்றும் காய்களை கொண்டு விளையாடும் சதுரங்க பலகை விளையாட்டு. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் எவர் பலகையின் மையத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வருவதே விளையாட்டாகும். இது சுலபமாக தெரிந்தாலும் வெற்றி பெற தந்திரம் வேண்டும்
பயன்
💐சிறந்த பொழுது போக்கு.
💐மனதை ஒரு முகப்படுத்த உதவும்.
💐சிந்தித்து செயலாற்ற சிறந்த பயிற்சி

இன்றைய செய்திகள்

30.08.19

☘நெல்லை மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

☘குஜராத் சர்தார் சரோவர் அணை நீர்மட்டம் வரலாறு காணாத உயர்வு.. அபாயகட்டத்தை தாண்டி நீர்மட்டம்.

☘தக்காளி வீணாவதைத் தடுக்க புது சாதனம்... விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் ஐ.ஐ.டி மாணவர்கள்!

☘வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்: 6 லட்சம் பேர் வெளியேற்றம்.

☘உலகக் கோப்பையில் தங்கம் வென்றார் இளவெனில் வாலறிவன். தற்போது நடந்து வரும் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் நான்கில்
 மூன்று தங்கங்களை இந்தியா வென்றுள்ளது.

☘இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் ஜமைக்காவில் நாளை தொடங்குகிறது.

Today's Headlines

     * Chief Minister Palanisamy ordered to open water from 4 reservoirs for irrigation in NELLAI district.
                                   
     * In Gujarat "Sardar Sarovar Dam" Water Level Increases by breaking the history dangerously
                                   
  * IIT students invented. a device to avoid the wastage of tomatoes.

   * Japan is floating inthe flood .6 lakhs people was evacuated
                                 
  * IIlavenil Valarivan won gold at the World Cup.India has won three gold in the women's 10-meter air rifle category at the ongoing World cup.                                                                                     
   * The 2nd Test  between India andg West Indies begins tomorrow in Jamaica.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive