திருக்குறள்
அதிகாரம்:தவம்
திருக்குறள்:267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
விளக்கம்:
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.
பழமொழி
An evil deed has a witness in the bosom
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற இரண்டு வார்த்தைகளும் என் உள்ளத்தின் நிலையை காண்பிக்கும் மற்றும் என் பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. எனவே அவற்றை நான் எப்பொழுதும் பயன்படுத்த முயல்வேன்.
பொன்மொழி
நம்மைச் சுற்றி அழகான சூழல் ஏற்படுத்துவதன் மூலம் நாமும் நம்மைச் சார்ந்த சமூகமும் மகிழ்ச்சி அடைவதில் சந்தேகமில்லை...
---அப்துல் கலாம்
பொது அறிவு
* உலகின் இருதயம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
அமேசான் காடுகள்
* அமேசான் காடுகள் மூலம் நமக்கு எத்தனை சதவீதம் ஆக்ஸிஜன் கிடைக்கிறது?
20% ஆக்ஸிஜன் கிடைக்கிறது
English words & meanings
Barometer - an instrument used to measure atmospheric pressure.
பாரமானி. வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி.
Backyard - a space at the back of the house.
வீட்டின் பின்புறம் உள்ள பகுதி.
ஆரோக்ய வாழ்வு
ஏலக்காய் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் .ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றது .
Some important abbreviations for students
* PRC - Prestressed Reinforced Concrete
* PSC - Prestressed Concrete
நீதிக்கதை
கைமேல் பலன் கிடைத்தது
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.
ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.
திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்
தாகம் - வேட்கை
தேதி - நாள்
திருப்தி - உள நிறைவு
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
இன்றைய செய்திகள்
26.08.2019
* அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களுக்கு நாளை 2ம் கட்ட பி.எட் கலந்தாய்வு நடைபெறுகிறது.
* பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் ‘கல்வி தொலைக்காட்சி’ இன்று முதல் ஒளிபரப்பு: முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார்.
* சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன். திரு. சிவன்.
* கண்ணை கட்டியபடி, ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை எய்து சென்னை சிறுமி சஞ்சனா சாதனை படைத்துள்ளார்.
* உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Today's Headlines
🌸 Second B.Ed counselling for vacant seats in government aided colleges will be held tomorrow.
🌸 Tamilnadu Government's educational television channel for school students to be broadcasted today said Chief Minister Palanisamy .
🌸Chandrayaan version-3 ready: stridently vibrating said ISRO Tamilan Mr. Shiva ....!
🌸 Chennai girl Sanjana has set a record by shooting 307 arrows in one hour by tying her eyes
🌸 PV Sindhu won gold in the World Badminton Championship Final. She also became the first Indian to win gold on the World Badminton Championships.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...