பள்ளிகளில் சுகாதாரம் குறித்து செப்.1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின், தூய்மையான நிகழ்வுகள் திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும் செப்.1-ஆம் தேதி முதல், 15-ஆம் தேதி வரை நடத்த வேண்டும். இதில், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில், உடைந்த நாற்காலிகள், பயன்பாட்டில் இல்லாத உபகரணங்கள், பாழ்பட்ட வாகனங்கள் உள்பட அனைத்து விதமான கழிவுப் பொருள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளூர் பிரதிநிதிகளோடு இணைந்து பள்ளிக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்கு, தூய்மை சார்ந்து எடுத்துரைக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், விடியோக்களை, ஒவ்வொரு நாளும், மாலை 4 மணிக்குள், மனிதவள மேம்பாட்டுத்துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கேற்ப, ஒவ்வாரு நாளின் தொகுப்பை samagrashikshatn@ gmail.com என்ற மாநிலத் திட்ட இயக்கக மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளிகள் விரைந்து அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...