திருக்குறள்
அதிகாரம்:புலான்மறுத்தல்
திருக்குறள்:257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
விளக்கம்:
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.
பழமொழி
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
The size of a thing does not necessarily indicate its potency
இரண்டொழுக்க பண்புகள்
1. நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளை தெரிந்து கொண்டு அவற்றை உண்டு என உடல்நலத்தை பாதுகாப்பேன்.
2. சுய சுத்தம், தலை முடி ஒழுங்காக வெட்டுதல் மற்றும் சரியான நேரத்திற்கு பள்ளி வருதல் போன்றவற்றை கடைபிடிப்பேன்.
பொன்மொழி
இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் ...
----------இறையன்பு ஐஏஎஸ்
பொது அறிவு
ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 9 - நாகசாகி தினம்
1. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது வீசப்பட்ட அணுக்குண்டுகள் எவை?
ஹிரோஷிமா - Little boy
நாகசாகி. - Fat man
(இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவினால் வீசப்பட்டது)
2. இவ்விரண்டு அணுக்குண்டுகளும் எதனால் செய்யப்பட்டவை?
Little boy - யுரேனியம்
Fat man - புளூட்டோனியம்
English words & meanings
Umbrella bird - a bird which has umbrella like crest at it's top.
வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க காடுகளில் வாழும் குடை பறவை.
இதன் தலையில் காணப்படும் கொண்டையை குடை போல விரிக்கும்.
அழியும் நிலையில் உள்ள பறவை.
ஆரோக்ய வாழ்வு
குங்குமப்பூ - தினமும் ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட ரத்தம் சுத்தி ஆகும்.
Some important abbreviations for students
min - minute or minimum
vs - versus
நீதிக்கதை
சுடரொளி ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசைபட்டு, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துக்குப் போட்டான்.
காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.
மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.
ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.
சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாது, எழுதத் தெரியாது,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.
நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.
வெள்ளி
சமூகவியல்
இந்தியப் பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,440,000 சதுர கிலோமீட்டர்.
இந்தியப் பெருங்கடல் உலகின் மூன்றாவது பெரிய நீர்நிலை.இது பூமியின் மேற்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உள்ளடக்கிய நீர்நிலை ஆகும்.
இன்றைய செய்திகள்
09.08.2019
* முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!
* மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன, அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
* மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இனி ரூ.100-க்கு பதில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
* ரஷியாவில் நடைபெற உள்ள பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* தேர்தல் முறைகேடு விவகாரத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்க முடியாததால் இந்திய வில்வித்தை சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது வில்வித்தைக்கான உலக அமைப்பு.
Today's Headlines
🌸President Ramnath Govind awarded the Bharat Ratna award to the former President Pranab Mukherjee
🌸The Chennai Meteorological Department said that heavy rainfall is expected in the Western Ghats,
🌸If you do not wear a helmet while riding a motorcycle, you will be fined Rs.1000 Instead of100.The order for this will be released soon.
🌸 Marikom has been selected to the Indian team for the Women's World Cup Boxing Championships in Russia.
🌸 The World Organization for Archery has suspended the Archery Association of India for failing to address the issue of election malpractice within a specified time frame.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...