டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு
இலவச பயிற்சி அளிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
வேலைவாய்ப்பு பயிற்சித் துறை மூலம் சென்னை கிண்டியில் (பேருந்து நிலையம்அருகே டான்சி கட்டிடத்தில்) புதிதாக மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்குகின்றன. போட்டித் தேர்வுகளில் ஏற்கெனவே வெற்றி பெற்ற வல்லுநர்களையும் அனுபவமும், திறமையும் வாய்ந்த ஆசிரியர்களையும் கொண்டு இந்தபயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாதிரி தேர்வுகளும், மாதிரி நேர்காணல்களும் உண்டு. வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டு, குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரிகள் கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது மின்னஞ்சல் (statecareercentre@gmail.com)மூலமோ தங்களது பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, செல்போன் எண் ஆகியவற்றை பதிவுசெய்ய வேண்டும். மனுதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் நேர்காணல் மூலம் மனுதாரர்கள்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...