RTE
அமலாக்கம் தமிழகத்தில் முறையாக நடைமுறை படுத்தப்படாத காலகட்டத்தில்
(அதாவது 23/8/2010 முதல் 16/11/2012) அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்ப தமிழக அரசு அனுமதி
அளித்தது. TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பணி நியமனம் காலகட்டங்களில்
தெரியாமல் பலர் பணி நியமனம் பெற்றனர். அரசும் அனுமதி தந்தது. 16/11/2012
க்கு பிறகு தான் TET கட்டாயம் என்ற அறிவிப்பு வருகிறது. ஆகவே அந்த
குறிப்பிட்ட காலகட்டத்தில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TET பொருந்தாது என
பல்வேறு தரப்பில் அரசுக்கு எடுத்து கூறப்பட்டது. அதன் விளைவாக அரசு பள்ளி
மற்றும் மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு கிடைத்தது.
மீதமுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்ந்த சுமார் 1500 ஆசிரியர்கள்
பணிப்பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாக தமிழக அரசின் கவனத்திற்கு பல்வேறு
கடிதங்கள் வாயிலாகவும், நேரடியாகவும், சங்கங்கள் மூலமாகவும், பத்திரிகை
செய்திகளாகவும் எடுத்து உரைக்கப்பட்டது.
முறையான
அலுவல்கள் , அரசாணை, செயல்முறைகள் பின்பற்றப்படாமல் அரசு 23/8/2010 முதல்
இன்று வரை பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்றவைகளை அளித்து வருகிறது.
வழக்குகள் வழக்கம் போல நடைபெறுகின்றன.
இந்த
சட்டமன்ற கூட்டத்திலாவது தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சம்மந்தமே
இல்லாமல் சிக்கலில் தவிக்கும் TET நிபந்தனை ஆசிரியர்கள் அனைவருக்கும்
விலக்கு அளிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்த சுமார் 1500 ஆசிரிய
குடும்பங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த சிக்கலின் உண்மையான சாராம்சத்தை
எதிர் கட்சிகளிடம் கொண்டு சேர்த்து சட்டமன்றத்திலேயே தீர்வு காண
வலியுறுத்த முற்பட்ட கூட பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மன அளவில் தெம்பு
இல்லை.
ஆயினும் இன்னும்
கூட தமிழக முதல்வரும், கல்வி அமைச்சரும் நல்ல முடிவு எடுத்து TET
நிபந்தனைகளில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நலன் காப்பார்கள் என்ற
நம்பிக்கையில் அனைத்து ஆசிரியர்கள் சார்பாக TET நிபந்தனை ஆசிரியர்
கூட்டமைப்பு வேண்டுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...