அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ்,
சிசிடிவி பொருத்தும் தமிழக அரசின்
உத்தரவை அமல்படுத்த 4 வார அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது. பள்ளி வாகனங்களில் ஜபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்தக்
கோரி சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை
தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், சில
மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனம் ஒன்றில்
டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் 4 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு
கொடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நடத்துனர் கைது செய்யபட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள், மூலமாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு
கேள்விக்குறியாகியுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற
சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகள்
கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க கோரி, தமிழக அரசுக்கு
கடந்த மாதம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கைக்கு, தமிழக அரசு
செவி சாய்யக்கவும் இல்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை. எனவே மாணவர்களின்
நலன் கருதி அவர்களின் பாதுகாப்பான பயணத்தை பெற்றோர்கள், இணையதளம் மூலம்
கண்காணிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும்
என்று கோரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக இந்த வழக்கானது, நீதிபதிகள்
எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க
உத்தரவிடப்பட்டடது.
அப்போது,
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளரையும் நீதிபதிகள், எதிர்மனுதாரராக
சேர்த்ததை அடுத்து, இவ்விகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து
வருவதாகவும், விரைவில் அதுதொடர்பான உத்தரவு நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து பள்ளி வாகனங்களிலும்
ஜி.பி.எஸ் மற்றும் சிசிடிவி பொருத்த, கடந்த 22ம் தேதிய்று
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவின் நகல் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டது. இந்த உத்தரவானது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை
ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ், சிசிடிவி
பொருத்தும் தமிழக அரசின் உத்தரவை 4 வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என
உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...