மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பட்டியலில்
தமிழகம் முழுவதும் 199 தலைமை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர் பணியிடங்களுக்கான தகுதியானவர் பட்டியல் 1.1.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியானவர்களை சரிபார்க்க இப்பட்டியலை அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் துறை பதவி உயர்வு குழுவால் பரிசீலிக்கப்பட உள்ளது.
அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடத்தில் இருந்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு முன்னுரிமைப்படியே அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேரும், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 99 பேரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் மீது தண்டனை ஏதும் வழங்கப்பட்டிருப்பின் அதன் விபரம், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள விபரம், அதன் தற்போதைய நிலை, புலனாய்வு துறையின் அல்லது வேறு விசாரணைகள் நிலுவையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட 25 கேள்விகளுக்கு உரிய விபரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரித்து அனுப்பி வைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...