Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரண்டு ஆசிரியர்கள் பேசியதில் -"படித்ததில் பிடித்தது "

இரண்டு ஆசிரியர்கள் பேசியதில்

சார்  மூன்றாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது ரொம்ப ஆரோக்கியமான விசயம்தானே, எதைச் சொன்னாலும் எதிர்ப்போம் என்றால் எப்படி சார்? இந்தப் பசங்களபாருங்க ஆனா ஆவன்னா தெரியாம பத்தாம் வகுப்புக்கு வந்துர்றாங்க. நாம எவ்வளோ கஷ்டப்படுறோம் இவங்கள வச்சுக்கிட்டு. என்னைப் பொறுத்தவரை இது அவசியமான திட்டம். பத்தாம் வகுப்பு எடுக்கிற வாத்தியாருக்கு சிரமம் பாதியா குறைஞ்சுரும்.
சார் உண்மைதான் ...ஆனா பாதியா குறையாது முழுசா குறைஞ்சிரும்..
எப்படி சார்...
ஒண்ணுமில்ல மூன்றாம் வகுப்பில் பெயில் ஆனால் இருபது பேருக்கு நாலு பேர் பெயிலாவான். அவன் திருப்பி ஐந்தாம் வகுப்பு வரும் பொழுது இன்னொரு நாலு பேர் பெயிலாவான். அப்படி தப்பிச்சு எட்டாம் வகுப்பு வரும் பொழுது இன்னும் ஒரு மூணு பேரை காலி செய்வோம். ஆக ஒன்னாம் வகுப்பில் இருபது பேரா இருந்த வகுப்பில் ஒன்பதாம் வகுப்பில் ஒன்பது பேர்மட்டும் இருப்பான்.
அவ்வளோ பெரும் படிக்கத் தெரிந்தவனா இருப்பானே சார். அது போதாதா?
ரொம்ப சரி, ஆக இந்தக் கணக்குப்படி பார்த்தாலும் அறுபத்தி ஐந்து சதா மாணவர்களை வடிகட்டிவிடுவோம்.
பத்தாம் வகுப்பில் இப்போது இருக்கும் அதீத மாணவர் எண்ணிக்கை சரேல் என்று குறையும் இல்லையா?
ஆமா, மந்தை மந்தையாக வைத்துக் கொண்டு என்ன செய்வது. படிக்கிறவன் படிச்சா போதுமே. நான் சொன்னதுதானே சரி. நம்ம வேலை பாதியாக குறைந்துவிடும்.
இல்லை முழுசா குறைஞ்சிரும். எப்படின்னு கேளுங்க இப்போ இருக்கிற மாணவர் எண்ணிக்கைக்கே நான்காயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உபரி என்று சொல்கிறது அரசாங்கம். பத்தாம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் கிட்டத்தட்ட ஐம்பது சத ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக இருப்பார்கள். ஏன் அதற்கு மேலே கூட உபரியாக இருக்க வாய்ப்பு இருக்கு.
ஐயோ
அப்புறம் நம்ம பள்ளியில் யாரு ஸ்டேசன் ஜூனியர்.
நான்தான் சார்.
பாரின் சர்வீஸ் தமிழ்ல அயற் பணி என்று கேள்விப் பட்டிருக்கீங்களா?
அப்படீன்னா, வேற துறையில உங்களுக்கு ஒரே பணிஇடம் ஒதுக்கப்படும். அப்புறம் இந்த பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கட்டிக்கொண்டு அழ வேண்டாம். உங்க சிரமம் முழுசா குறைஞ்சிரும்.
சார், ரொம்ப ஆபத்தான திட்டமா இருக்கே சார்.
போன வருஷம் நம்மள்ட்ட பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டு ராணிஸ் போனாளே வெள்ளையம்மா இப்போ ஏன் பள்ளிக்கூடம் போகலைன்னு தெரியுமா?
அடப்பாவமே, பள்ளிக்கூடம் போவலையா எனக்கு தெரியல சார்.
ப்ளஸ் ஒன்னில் பெயில். பிரண்ட்ஸ் கேலி பண்றாங்கன்னு சொல்லி வீட்டில் இருந்துகிட்டா.
அடப்பாவமே.
சரி இப்படி பெயிலாகிற பெரும் கூட்டம் எங்க போகும்.
எங்க சார் போகும்.
பான் பராக் போட்டுகிட்டு வேறு மாநிலத்துக்கு தோசை இட்டலி விக்கப்போகும்.
அப்படியும் இல்லை என்றால் இருக்கு மதவாதக் கட்சிகள். அதில் உறுப்பினராகி நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையில் இறங்கும்.  கோமியம் விற்கும்,
ஆமால்ல ....
யோசிங்க சார். முதல் விசயம் படிக்கிற பயலுக்கு வாத்தியார் தேவையே இல்லை. நம்ம வாங்குற சம்பளம் படிக்க சிரமப் படும் பசங்களுக்கு சொல்லித்தரத்தான். இனிமேலும் எட்டாவதுல பெயில் போடுங்க, ஒன்பதாம் வகுப்பில் பெயில் போடுங்கன்னு பினாத்தாதீங்க.
சரிங்க சார்.




9 Comments:

  1. 10,11,12 classla fail aana kettu poga mattana? Athanala 12th varaikum ellaraiyum pass poda sollalama?

    ReplyDelete
  2. அப்படியும் இல்லை என்றால் இருக்கு
    01.மதவாதக் கட்சிகள். அதில் உறுப்பினராகி நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையில் இறங்கும்.
    02. கோமியம் விற்கும்,ஆமால்ல ....
    ------------------
    ஆசிரியா்கள் உரையாடுவதாக தலைப்பு இருந்தாலும் ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விடம் போல் ஒரு தேசவிரோதி பேசுவதுபோல் உள்ளது. பள்ளிக்கு வரவில்லை எனில் விவசாயம் வியாபரம் கூலி வேலை என்று ஏதேனும் சொந்த தொழில் செய்யப் போகின்றவர்கள்தான் அதிகம்.கோமியம் விற்க யாரும் போகவில்லை.தினசரி அதற்கு வியாபாரச் சநதையும் இல்லை. கோமியம் விற்கச் சென்றவர்கள் எத்தனை பேர் மற்றும் வீட்டு முகவரி தரமுடியுமா ? ஏன் இந்த நயவஞ்சக அடிமைத்தனம். இத்தகைய கருத்தைப் பதிவிடுகின்றவர்கள் இந்துக்களின் மறைமுக எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். 23ம் புலிகேசி எம்ஜிஆா் நடத்த எங்கள்வீட்டுப் பிள்ளை , அடிமைப் பெண் சிவாஜி நடித்த உத்தம புத்திரன் போன்ற திரைப்படங்களில் அடிமையாக வாழ்ந்தவர்களின் அவலம் தகுதி தெளிவாக காட்டப்பட்டிருக்கும். 1000 ஆண்டுகள் இந்தியா்களை நேசிக்காத வெளிநாட்டு காடையர்களால் ஆளப்பட்டது. ஆகவே நமது சமூகம் 23ம் புலிகேசிகளால் நிரப்பப்பட்டுள்ளது.ஆகவேதான் அனைத்து துறைகளிலும் ஊழல் மற்றும மனித வளத்திற்கும மனித நேயத்திற்கும் போருந்தாக காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றது.பணிநிறைவு இயற்பியல் பேராசியரான நான் கடந்த மாதம் இயற்பியல் ஆசிரியா் நோ்முகத் தோ்வை நடத்த ஒரு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தேன்.அங்குள்ள அறிவியல் கணித முதுகலை ஆசிரியா்களிடம் நடந்து முடிந்த நீட்தோ்வு வினாத்தாள்களை பார்த்தீர்களா ? என்று கேட்டேன்.யாரும் படிக்கவில்லைபார்க்கவும் இல்லை என்றார்கள். நமது கல்வித்துறை ஏன் இப்படி நாசமாக உள்ளது என்பது தங்களுக்கு விள்ங்கியிருக்கும்.

    ReplyDelete
  3. நான் ஆழ்வாா் குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில்படித்தபோது எனது முதல்வா் அடிக்கடி இந்த வாக்கியத்தைச் சொல்வாா் One who does not read has no more advantage than one who cannot read- தொடா்ந்துபடிக்காதவனுக்கும் தற்குறிக்கும் என்ன வேறுபாடும் இல்லை.ஆசிரியா்களைப் பார்க்கும் போது எனக்கு இந்த வாசகம்தான் நினைவுக்கு வருகின்றது. இப்படிப்பட்ட ஆசிரியா்கள் இருந்தால் நமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கோடி கோடியாக ராணுவத்திற்கு கருவிகளை வெளிநாட்டினரிடமிருந்து இறக்குமதி செய்யவும் அவசியம் இருக்காது. 112 கோடி மக்கள் கொண்ட மனித வளம் மிக்க நாட்டில் நடந்துமுடிந்த நீட்வினாக்களைக் கூட தெரிந்து கொள்ள ஆர்மமில்லாத ஆசிரியா்கள் என்ன சாதிப்பார்கள் ? இவர்களிடம் படிப்பவா்கள் கிளிப்பிள்ளைகள் போல் இருப்பார்களா ?

    ReplyDelete
  4. தமிழ் நாட்டில் எங்கு கோமியம் விற்கிறார்கள்??? எந்த இந்து கோவிலிலும் பிற மதத்தை தரக்குறைவாக பேசியது இல்லை.. ஆனால் ஞாயிறு தோறும் நடைபெறும் ஜபவழிபாட்டில் இந்து மதத்தை தரகுறைவாக பேசாமல் இருந்தது இல்லை... மதவாத கட்சி எது??? இது ஆசிரியர்கள் உரையாடல் மாதிரி இல்லை...

    ReplyDelete
  5. தயவு செய்து இந்த மாதிரி பதிவுகளை போட வேண்டாம்... தமிழ் யுகம் சேனலில் IPS VIKRAMAN KARUR பேசியதை பாருங்கள்.. அந்த மாதிரி நல்ல பதிவுகளை போடுங்கள்... ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும்... மத சம்பந்தமானதாக இருக்க கூடாது..

    ReplyDelete
    Replies
    1. தவறு. நல்ல கலாச்சாரம் பண்பாடுகளை வளா்க்கும் கலைகளை கருத்துக்களை பகிரலாம். பகிர வேண்டும்.
      01. இன்று தமிழ்நாட்டில் ஒரு தேவாரப்பாடல் முறையான ராகத்தோடு பாடத் தெரிந்து இந்துக்கள் எத்தனை போ் ?தேவாரம் திருவாசகம் போன்ற தமிழ் பாடல்களை வழக்கொழிந்து போகச் செய்வது மதச்சார்பற்ற தன்னையின் விரிவாக்கமா ?
      02 பழையது கழிய வேண்டும்.புதியன் வளர வேண்டும்.ஆம் புரணங்களில் காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள நிறைய உள்ளன. இருக்கட்டும். அதை படிக்க கட்டாயம் இல்லை.ஆனால் விவேகானந்தரையும் தாயுமானவரையம் ஸ்ரீநாராயணகுருவையும் அறிய விடாமல் தடுப்பது ஏன்.? அவர்களையும் மாணவர்கள் மறக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி என்பது நயவஞ்சகம் போலில்லை.இந்து மாணவர்கள் உருப்பட தேவையான கருத்துக்களை கொடுக்கக் கூடாது என்பதுதான் நமது மதச்சார்பறற அரசின் திட்டம். இந்துமதம் என்பதே ஒரு புத்தகம் ஒரு பழக்க வழக்கம் சார்ந்தது அல்ல.பல பல வற்றையும் அரவணைக்கும் ஒரு மனநிலை கொண்டது. இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை கற்றுக் கொடுங்கள்.அவன் சிறந்த மனிதனாக வாழ்வான்.

      Delete
  6. தினசரி செய்தியில் தவறாமல் இடம் பெறும் செய்தியாக இருப்பது ” ஒரு குழந்தை ஒரு பெரிய பையனாலோ ஒரு கிழவனாலோ பாலியல் துன்புருத்தலுக்கு ஆளாக்கப்பட்டது” என்ற செய்திதான். இதனற்கு தண்டனை 10 ஆண்டுகள் சிறை வாசம். திரைப்படங்களின் தாக்கத்தால் மனக் கட்டுப்பாட்டை இழந்த பையன் ஒரு சிறுமியிடம் தவறி நடந்து விட்டால் ..... அவன் நமது பையனாக இருந்தால்..........அந்த சிறுமி நம்வீட்டுச்செல்வமாக இருந்தால் ........இராமனை படித்த பழைய காலங்களில் பெண்ணிடம் எப்படி நடக்க வேண்டும் என்று இளைஞா்கள் அறிந்து கொண்டார்கள். காட்டில் சுர்ப்பனகையிடம் இராமன் ” பெண்ணே இந்த காட்டில் காணப்படும் நீ யாா் யாா் உன்பதி ? உன் பெயா் என்ன ? என்றுதான் கேட்கிறான். தனிமையில் வந்தவள்..... பேரழகி .... என்று சிந்தனையில்லை. திரைப்படங்கள் இளைஞர்களை எங்கோ அழைத்துச் செல்கின்றன. பிரம்மச்சரியம் என்ற சொல் மறக்கடிக்கப்பட்டு வழக்கொழிந்து போய்விட்டது.இன்றைய திரைப்படங்கள் கற்பு நெறியை ஆண் பெண் பேதமில்லாது வளா்க்கின்றதா ? கற்பு நெறியில்லையெனில் நாம் மிருக உலக வாழ்விற்கு மீண்டும் செல்ல வேண்டும். பிரமச்சரிய காக்கும் நற்பண்பை இந்திய இளைஞர்கள் இழந்ததால் வெளிநாட்டு படையெடுப்புக்களை முறியடிக்கும் திறனை பலத்தை இழந்து இந்தியா அடிமைப்பட்டது. இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களை 23ம் புலிகேசியாக்குவது.தடுக்கும் வழி என்ன ? மனித வளம் காக்க வழி என்ன ?

    ReplyDelete
    Replies
    1. Hi Anuburaj Sir,

      Your articles are very good. Kindly send me your contact number to our email id - padasalai.net@gmail.com

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive