பிளஸ் 2 பாடத்திட்டத்தில்
தமிழ் மொழி குறித்த அச்சுப் பிழையை சரிபார்க்கத் தவறியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தொகுதிக் கான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.
இதில், வேலூர் சட்டப்பேரவை தொகுதியின்அதிமுக தேர்தல் பணிக் குழு பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேலூர் கொசப்பேட்டை பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில்தமிழ் மொழி வரலாறு குறித்து தவறான தகவல் அச்சிடப்பட்டிருந்தது. அது அச்சுப்பிழைதான். அதை திருத்தம் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை சரி பார்க்க தவறியவர்களுக்கு விளக் கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் பாடத்திட்டங்களில், இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். வரும் காலங் களில் தவறுகள் ஏதாவது நடந் தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயோமெட்ரிக் திட் டத்தை நிக் நிறுவனம் நாடு முழு வதும் செயல்படுத்தி வருகிறது. சாப்ட்வேரில் ஏற்பட்ட சிறு தவறால் இந்தி மொழி வெளியானது. குறைகள் தெரியவந்த மூன்றுநாட்களில் அதை மாற்றிவிட்டோம். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை மட்டும்தான் கடைபிடிக்கப்படும். யாரும் யாரையும் சூழ்ச்சி செய்ய முடி யாது. இந்தியாவில் உள்ள மற்ற எல்லோரைக் காட்டிலும் தமிழ கத்தில் இருப்பவர்கள் தெளிவான வர்கள். நம் மக்களை யாரும் ஏமாற்றி விட முடியாது’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...