வீடுகளில் ஏசி வசதி,
நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மற்றும் ஒருலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் உள்பட 10 அம்சங்களை கொண்டவர்களுக்கு இனி முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான சலுகை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் பொருட்களை வசதி அற்றவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை மானியத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மானியத்தில் வசதியானவர்கள் குடும்ப அட்டைகள் மூலம் பொருட்கள் பெறுவதை தடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புழகத்தில் இருந்த போலி குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மூலம் அரசு ஒழித்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போதும் போலி ரேஷன்கார்டுகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
அரசு ஆய்வு நடத்த உத்தரவு
இதையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆய்வு பணியும் தொடங்கி உள்ளது. இதன்படி குடும்ப அட்டைகளில் முன்னரிமை பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்ககான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் குடும்பம், தொழில்வரி செலுத்துவோர் உள்ள குடும்பம், குறைந்தது ஒருவர் வருமானவரி வரி செலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றோரை உறுப்பினராக கொண்ட குடும்பம் ஆகியோர் குடும்ப அட்டை வைத்திருந்தால் அவர்கள் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளார்கள்.
கார் வைத்திருந்தால்
இதேபோல், ஒரு குடும்பத்தில் 4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பபாட்டுக்கு வைத்திருந்தால், வீட்டில் ஏசி வைத்திருக்கம் குடும்பம், 3அல்லது அதற்கு மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் வைத்திருக்கும் குடும்பம், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பம் ஆகியோர் குடும்ப அட்டையில் இதுவரை முன்னுரிமை சலுகை பெற்று வந்தால் அது இனிமேல் நிறுத்தப்படும்.
முன்னுரிமை நீக்கப்படும்
மேற்கண்ட 10 அம்சங்களில் ஒன்று இருந்தாலும், அந்த குடும்பங்கள் மானியம் பெற தகுதியில்லாத குடும்பங்களாக கணக்கிடப்பட்டள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "அரசு அறிவித்துள்ள 10 தகுதிகளில் ஏதேனும் ஒன்று பெற்றிருந்தாலும் அந்தக் குடும்ப அட்டைகள் முன்னுரிமை பெறத் தகுதி கிடையாது . தற்போது முன்னுரிமை பெறும் தகுதியைப் பெற்றிருந்தால் அதை நீக்கலாம் என பரிந்துரை செய்யப்பட உள்ளது. அப்படிச் செய்தால், அந்த அட்டைதாரர்கள் நியாய விலைக் கடையில் அரிசி பெற முடியாது. சர்க்கரை பெற முடியும். இனி வரும் காலங்களில் வழங்கப்படும் சலுகைகள் ஏதும் பெற முடியாத நிலை உருவாகும்" என்றார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...