'ராட்சசி' பட
இயக்குனர் கௌதமராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு ஆசிரியர்
சங்கங்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை ஜோதிகா நடித்து அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் 'ராட்சசி'.
'சாட்டை' படம் போல இப்படமும் அரசுப் பள்ளிகளின் நிலையை
குறிப்பிட்டுக்காட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது. படம் தொடர்பாக கண்டன
அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்த தமிழ்நாடு ஆசிரியர்
சங்கத்தினர், 'ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' திரைப்படம் அரசுப்
பள்ளிகளை சீர்த்திருந்துவதாக கூறி சேற்றை வாரிப்பூசுகிறது. அரசுப்பள்ளிகளை
கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு
பரப்பும் விதமாகவும் உள்ளது. எனவே இப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்'
என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், 'ராட்சசி' படத்தினை தடை செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், 'ராட்சசி திரைப்படம் அரசுப் பள்ளிகளை
கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி
அவதூறு பரப்பும்படி உள்ளது. ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும். 'அரசுப்பள்ளி
எங்கும் குப்பை. அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள்
எப்போது போவார்கள் என்று தெரியாது', 'இந்த வாத்தியார்களால் தான் நாடே
கெட்டுப்போச்சு' என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
எனே, 'ராட்சசி' படத்தினை தடை செய்திடவும், குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய
காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கியும், படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர்
கௌதமராஜ், வசனம் எழுதிய பாரதிதம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...