அரசுப்பள்ளிகள் கட்டமைப்பு வசதி களை
மேம்படுத்தும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை முடுக்கிவிட் டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையில் புதிய பாடத்திட்டம் உட்பட பல் வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. எனினும், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை, கட்டிடம் உட்பட முறை யான உட்கட்டமைப்புகள் இல்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதனால் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துதல்அவசியம் என தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர் கள் உதவியுடன் கணிசமான அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை உட்பட தேவையான உட்கட்டமைப்பு களை ஏற்படுத்தித்தர கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது. இதற்கான பள்ளி கள் வகைப்பாடு பட்டியல் தயாரிக் கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி களின் உட்கட்டமைப்பு சார்ந்த முழு விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இயக்குநரகத் துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...