மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன் பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்களை போலீஸ் உதவியுடன் மருத்துவ கல்வி இயக்கம் அப்புறப்படுத்தியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த 9-ம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கியது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வுக்காக இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ல் துவங்கி 20ம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 39 ஆயிரத்து 13 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி அரசுக்கல்லூரிகளில் உள்ள 3250 இடங்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 31,353 பேர் தகுதி பெற்றுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களுக்கு 74 பேரும், விளையாட்டு பிரிவில் உள்ள 8 இடங்களுக்கு 285 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான பிரிவில் உள்ள 11 இடங்களுக்கு 691 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி சிறப்பு பிரிவினருக்கான முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினருக்கான மருத்துவக்கலந்தாய்வு 8-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4-ம் நாளான இன்று அனைத்து கல்லூரிக்களுக்கான இடங்கள் நிரம்பியது. இடங்கள் நிரம்பியதால் இன்றைய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் ஏமாற்றமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன் பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...