பள்ளி மாணவ, மாணவியருக்கு
செருப்புக்குப் பதில் ஷூ வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடப்பாண்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
எனவே மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார்.
இதேபோன்று மாணவர்களுக்கு ‘யூ டியூப்’ பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும் என்றும், வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், செப்டம்பர் இறுதிக்குள் ஏழாயிரத்து 800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Enga schoola laptop vanthu 10days aaguthu innum tharala why
ReplyDelete