லைநகர், லண்டனைச் சேர்ந்த, புகழ்பெற்ற, க்யூ.எஸ்., எனப்படும், &'குயுக்குயாரெல்லி சிமாண்ட்ஸ்&' என்ற, நிறுவனம், சர்வதேச அளவில், உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், 2020ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல், கடந்த மாதம் வெளியானது. இதில், உலகின் முதல், 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில், ஐ.ஐ.டி., பாம்பே, ஐ.ஐ.டி., டில்லி, ஐ.ஐ.எஸ்சி., பெங்களூரு ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.அதுபோல, ஐ.ஐ.டி., மெட்ராஸ், ஐ.ஐ.டி., காரக்பூர், ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., ரூர்கி ஆகிய கல்வி நிறுவனங்கள், முதல், 400 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எனினும், கடந்த ஆண்டில், 472வது இடத்தை பிடித்திருந்த, ஐ.ஐ.டி., கவுஹாத்தி, இந்த ஆண்டில், 491வது இடத்திற்கு வந்துள்ளது.அதே நேரத்தில், புதிதாக இடம்பெற்ற, கல்வி நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த, ஓ.பி.ஜிந்தால் குளோபல் யுனிவர்சிட்டி, 1,000 நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. கல்வி நிறுவனங்களின் ஆறு முக்கிய தகுதிகளின் அடிப்படையில், தர வரிசை தீர்மானிக்கப்படுகிறது. கல்வித்தரம், வேலையளிப்பவர்களின் மதிப்பு, மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம், துறைகளின் தனித்தன்மை, சர்வதேச ஆசிரியர்கள் பங்கேற்பு மற்றும் பயிலும் சர்வதேச மாநாடுகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், இந்திய கல்வி நிறுவனங்கள், மிகவும் பின்தங்கியிருப்பது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்,பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமேஷ் பெக்ரியால் நிஷாங், இது குறித்து கல்வித்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், க்யு.எஸ்., தர வரிசைக்கான தேவைகளை, இந்திய கல்வி நிறுவனங்கள் சிறப்பாக பெற்றுள்ள நிலையில், தர வரிசையில் மிகவும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை ஆராயுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.காரணங்களை ஆராய்வதற்காக, அமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில் பங்கேற்ற பல கல்வியாளர்கள், இது தொடர்பாக விவாதித்தனர். &'இளநிலைப் படிப்பில் போதிய கவனம் இல்லாமல் இருப்பது; வெளிநாட்டு நிபுணர்களை, ஆசிரியர்களாக அதிக அளவில் பணியமர்த்தாது&' உள்ளிட்ட காரணங்களை, அவர்கள் பட்டியலிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...