அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் உயர்கல் வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித் தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: அரசு பொறியியல் கல்லூரி களில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதுபோல அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 100 பட்டயப்படிப்பு மாணவர்களின் திறனை உலகளா விய அளவில் மேம்படுத்தும் வகையில், அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.
இத்திட்டம் ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ம் ஆண்டு தொடங்கப்படும். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு,நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தால் வரையறை செய்யப் பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதி கள், ஆய்வகங்கள், நூலகம், பயிற்சிப் பட்டறை ஏற்படுத்து வதுடன் நிர்வாகம் மற்றும்வகுப்பறைக் கட்டிடங்கள் ரூ.37 கோடியில் கட்டப்படும். பாரம்பரியமிக்க சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியைப் புதுப்பித்தல் மற்றும் புதிய மகளிர்விடுதி கட்டும் பணிகள் ரூ.9 கோடியே 90 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்கள் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிறுவப்படும். கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள பொறியியல் பட்டதாரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறனை மேம்படுத் தவும், வேலைவாய்ப்பை உருவாக் கவும் மண்டலத்துக்கு ரூ.20 லட்சம் வீதம் ரூ.1 கோடியில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...