பள்ளிகளில் கணினி அறிவியல்
பாடத்தை 6ம் வகுப்பு முதல் தனிப் பாடமாக வைக்க வேண்டும் என தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய முதன்மையான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதே நேரத்தில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு சேவைத்துறையைச் சார்ந்துள்ளது. கணினித்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திறம்படப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கணினி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் வாழ்வு என்னவோ கேள்விக்குறியான நிலையில்தான் உள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
உலகளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் கணினி பாடத்தை இணைக்க வேண்டியது அவசியமாகும். தற்போது தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது.
பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
கணினி பாடம் மூன்று விதமான பாடங்களாக மேல்நிலைப்பள்ளிகளில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில், எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர் களுக்கு ஆரம்பக் கல்வியில் இருந்தே கணினி கல்வியை அளித்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது அவர்கள் அடிப்படை கணினி அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். கணினிக் கல்வி வசதியான, தனியார் பள்ளிகளில் படிக் கின்ற மாணவர்களுக்கு கிடைத் துவிடுகிறது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அங்கு கணினி அறிவியல் பாடமும் கிடையாது. சொல்லித்தருவதற்கு கணினி ஆசிரியரும் கிடையாது.
எனவே, தனியார் பள்ளி களுக்கு நிகராக அரசுப் பள்ளிகளி லும் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் மூன்று பக்களாக இணைக்காமல் கட்டாயத் தனிப்பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும்
எங்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தரவேண்டுகிறோம்..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...