Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமஸ்கிருத கல்வி கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுப்பு; மத்திய அரசு உத்தரவு..!

சமஸ்கிருத
மொழியை மக்களுக்கு கற்பிக்க கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத கல்வி வழங்கும்படி ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்ததாவது, சமஸ்கிருதம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான மொழியாகும் இம்மொழியை மக்கிடையே வளர்க்கும் பணியினை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மத்திய மொழி நிறுவனஙகளின் தலைவா்கள் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா். ரமேஷ்பேக்ரியால்'நிஷாங்க்' தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும்போது 'சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் வகையில் மத்திய சமஸ்கிருத கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குறைந்தது. இரண்டு சமஸ்கிருத மொழி பேசும் கிராமங்களையாவத உருவாக்க வேண்டும்' என வலியுறித்தினார். இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் மூன்று மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களை தத்து எடுக்க ஒப்புக்கொண்டது. கிராமத்து மக்கள் சமஸ்கிருத மொழியில் உரையாட வைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஐந்து கிராமங்களை தோந்தெடுத்து அறிவித்துள்ளது. திரிபராவில் ஜூபர்டா, இமாச்சல பிரதேசத்தில் மாஸ்கட், கா்நாடகாவில் சிட்டெபெயில், கேராளவில் அடாட், மத்திய பிரதேசத்தில் பராய் ஆகிய கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரையும் சமஸ்கிருதத்திலேயே உரையாட வைக்க முடியும் என்று உறுதி வழங்கி உள்ளது. இது தவிர லால்பகதுார் சாஸ்த்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடா மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் இரண்டிரண்டு கிராமங்களைத் தத்தெடுக்கும் பணியில் ஈடுபடுமாறு மனிதவள மேம்பாடடு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive