Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

  தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை
கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 1872ல் தொடங்கப்பட்டு, 1881ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் 16வது மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி 2021ம் ஆண்டு துவங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகளின்போது ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்டு 12ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை, நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள வட்டாரங்கள் மாதிரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழக மற்றும் மத்திய அரசுகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது. இறுதியாக 2011ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. இதில் 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 ஆண்களும், 58 கோடியே 64 லட்சத்து 69 லட்சத்து 174 பெண்களும் அடக்கம். தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்களும் அடக்கம். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் 7வது இடத்தில் இருந்த தமிழத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive