வருமான வரி கணக்கு தாக்கல், வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டுமானால் வருமான வரி வழங்கும் பான் எண் (நிரந்த கணக்கு எண்) கட்டாயம். தற்போது சுமார் 40 கோடி பேரிடம் பான் கார்டு உள்ளது. பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதில் ஆதாரை பயன்படுத்தலாம் என மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய பான் எண்ணுக்கு பதில் ஆதார் எண்ணை குறிப்பிடலாம் என வருமான வரித் துறை அறிவித்தது. இந்நிலையில், ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது என்று புதிய குண்டை மத்திய அரசு போட்டுள்ளது.
அதனால் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால் செப்டம்பர் 1ம் தேதி முதல் பான் கார்டு காலாவதி ஆகி விடும். அதன் பிறகு புதிய பான் கார்டை வருமான வரி துறையிடம் வாங்க வேண்டியது இருக்கும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...